×

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் செப். 18-ம் தேதி மீண்டும் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் செப்டம்பர் 18-ம் தேதி மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 115வது பிறந்த நாளையொட்டி கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேடையில் 13 பெண்களுக்கு இந்த திட்டத்துக்கான ஏ.டி.எம். அட்டையை முதல்வர் வழங்கினார். மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், 1.06 விண்ணப்பங்கள் தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டது.

இனி வரக்கூடிய ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிர்களுக்கு வங்கிக் கணக்கில் ரூபாய் ஆயிரம் செலுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே, கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் செப்டம்பர் 18-ம் தேதி மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தகுதி இருந்தும் நிராகரிக்கப்பட்டவர்கள் இ-சேவை மையங்கள் மூலம் நாளை மறுநாள் முதல் விண்ணப்பிக்கலாம். 56.6 லட்சம் பெண்களுக்கு நிராகரிக்கப்பட்ட காரங்களை நாளை மறுநாள் முதல் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் எனவும், மீண்டும் விண்ணப்பிப்பவர்களுக்கு 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். தகுதியான ஆவணங்கள் இருந்தால் தகுதியான மகளிருக்கு கட்டாயம் உரிமைத் தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் செப். 18-ம் தேதி மீண்டும் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamilnadu ,Chennai ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...